சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘ப்ரீடம்’ திரைப்படம் இன்று திரைக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிதி சிக்கல்களால் இப்படத்தை இன்று வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நெருக்கடியை இன்றைக்குள் தீர்த்துவிட்டு, நாளையே படம் வெளியிடப்படும் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
முந்தையதாக சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ‘ப்ரீடம்’ திரைப்படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன்பே இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.