நடிகை சமந்தா, தற்போது எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவரது சமூக வலைதளங்களில் அவர் பதிவிடப்படும் புகைப்படங்கள் ஒவ்வொரு முறையும் கவனம் ஈர்த்து வருகிறது.

நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் தனிமையில் இருந்த சமந்தா, தற்போது இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஏற்கனவே பகிர்ந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர்கள் இருவரும் பயணித்துள்ளனர்.
இதற்கு முன் இணையத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் மீது பல விமர்சனக் கருத்துகள் வந்திருந்தன. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் சமந்தா தற்போது அமெரிக்க பயணத்திலிருந்து எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.