‘புஷ்பா: தி ரைஸ்’ மற்றும் ‘தில்லு ஸ்கொயர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் ராஜ் திரந்தாசு, தற்போது ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் அதிரடித் திரைப்படமான ‘கட்டாளன்’ படத்தில் இணைந்துள்ளார்.

முன்னதாக ‘மார்கோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, தயாரிப்பாளர் ஷரீப் முஹமது தற்போது ‘கட்டாளன்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பால் ஜார்ஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு, ‘காந்தாரா’ படத்தில் இசையமைத்து பாராட்டைப் பெற்ற அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். பான் இந்தியா அளவில் உருவாகும் இப்படத்தில் சமீபத்தில் சுனில், கபீர் துஹான் சிங் மற்றும் நடிகை ரஜிஷா விஜயன் இணைந்த நிலையில், தற்போது ராஜ் திரந்தாசுவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.