அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து உருவாக்கவுள்ள படம் ‘AA22xA6’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான் இந்தியா திரைப்படமாக காட்சியளிக்கிறது.

தீபிகா படுகோனே இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்ற நடிகர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், இதே வேடத்திற்கு டுவைன் ஜான்சனும் பரிசீலிக்கப்படுகிறார் என்பதும் இன்னொரு முக்கிய தகவலாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், சுமார் ரூ.800 கோடி பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது எனக் கூறப்படுகிறது.