தமிழில் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ போன்ற பல விருதுகள் பெற்ற திரைப்படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கிய கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பேட் கேர்ள்’, அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி சிவராமன் நடித்துள்ளார். அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை அமித் திரிவேதி வழங்கியுள்ளார். இது ஒரு டீனேஜ் பெண், அவளது விருப்பங்கள் மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.இருப்பினும், இந்த படம் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் கோவாவில் திரையிடப்பட்டு விருதைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘பேட் கேர்ள்’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.