சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்த ‘அமரன்’ படத்துக்கு அடுத்து, சாய் பல்லவி தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘தண்டேல்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், அவர் ஹிந்தி மொழியில் ‘ஏக் தின்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த ஹிந்தி படம், அவரது முதல் திரைப்படமாகும்.

இந்த கதையில், அமீர் கானின் மகனான ஜூனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சுனில் பாண்டே இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படம் நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சாய் பல்லவி, ஹிந்தியில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.