ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘வார் 2’ திரைப்படமும் வெளியாக உள்ளதால், இந்த இரண்டு பெரிய படங்கள் நேரடியாக மோத உள்ளன.

‘கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சவுபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் நாகார்ஜுனா, ‘கூலி’ திரைப்படத்தில் தனது காட்சிகள் குறித்த அப்டேட்-ஐ பகிர்ந்துள்ளார். அதில், எனக்கும் அமீர்கானும் இடையே எந்த காட்சிகளும் இல்லை. இந்தப் படத்தில் ரஜினி சார் உடன் பல காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் அமீர்கானுடன் எந்த காட்சியிலும் நடிக்கவில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறுகிறோம். இந்தப் படத்தில் நீங்கள் ஒரு புதிய அமீர்கானை பார்ப்பீர்கள், அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்றார்.