தமிழ் சினிமாவில் நடிகை சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட ஹீரோயின்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், அதே வரிசையில் டாக்டராக படித்து உள்ள சிந்து பிரியா தற்போது ‘இவன் தந்திரன் 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன் ‘மாஸ்டர்’, ‘இந்தியன் 2’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், வசந்தபாலன் இயக்கிய ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும், ‘கராத்தேபாபு’, ‘கயிலன்’ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆர். கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடித்த ‘இவன் தந்திரன்’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது.முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் யாரும் இந்தப் பாகத்தில் இடம்பெறவில்லை. இதில் ‘வட சென்னை’ மற்றும் ‘கேஜிஎப்’ படங்களில் நடித்த சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சிந்து பிரியா நடித்துள்ளார். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் உள்ளதா என்பது சுவாரஸ்யமான ஒன்றாக உள்ளது. மேலும், இப்படத்தில் நண்டு ஜெகன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.