கடந்த 2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா இணைந்து நடித்து வெளியான படம் ‘பையா’. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ‘அவரா’ என்கிற தெலுங்கு பதிப்பில் வெளியாகி அங்கேயும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் பையா தெலுங்கு பதிப்பில் பிரமாண்டமாக 4கே தரத்தில் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இதனை திருப்பதி டாலர் என்கிற நிறுவனம் விநியோகம் செய்கின்றனர்.
