தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும், புகைப்படங்களையும் திடீரென முழுவதுமாக நீக்கியுள்ளார் நடிகர் ரன்வீர் சிங். அதுமட்டுமன்றி, தனது ப்ரொஃபைல் புகைப்படத்தையும் கருப்பு நிறமாக மாற்றியுள்ளார். அதேபோல், “12:12” எனும் எண் மற்றும் குறுக்காக வைக்கப்பட்ட இரண்டு கத்திகளை கொண்ட கருப்பு நிற போஸ்டரையும் பதிவிட்டுள்ளார்.

அவருடைய இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்களிடம் ஒருபுறம் அதிர்ச்சியையும், மறுபுறம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ரன்வீருக்கும் அவரது மனைவி தீபிகா படுகோனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியான நிலையில், இப்போது அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் நீக்கியிருப்பது ரசிகர்களிடம் கவலையை உருவாக்கியுள்ளது. இதைப்பற்றி பலரும் கருத்துகளையும் சந்தேகங்களையும் கமெண்ட்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்னும் சிலர் இதை அவரது நடிப்பில் உருவாகி வரும் “துரந்தர்” திரைப்படத்தின் ப்ரமோஷன் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். அதில் இடம்பெறும் “12:12” எனும் எண் மற்றும் கத்தி சின்னங்கள், அந்தப் படத்தில் உள்ள முக்கியமான தகவல்களை குறிக்கக்கூடும் என்றும் அவர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.