2009ஆம் ஆண்டு, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடிப்பில் உருவான ‘அயன்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தப் படம் வெளியான போது, தெலுங்கில் ‘வீடோக்கடே’ என்ற பெயரில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடப்பட்டது. அங்கு இந்தப் படம் மட்டும் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
தற்போது, இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வீடோக்கடே’ திரைப்படத்தை சூர்யாவின் 50வது பிறந்த நாளை (ஜூலை 23) முன்னிட்டு, இந்த மாதம் ஜூலை 19ம் தேதியன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.