பாலிவுட் நடிகை ஊர்பி ஜாவேத், பல விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும் ஒருவராக அறியப்படுகிறார். சமூக வலைதளங்களில் தனக்கென தனித்துவத்தை ஏற்படுத்தும் வகையில், சுவாரஸ்யமான பொருட்களை உடையாக மாற்றி அணிந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் பிளாஸ்டிக் பாட்டில், செய்தித்தாள்கள், பழ தோல்கள் போன்றவை கூட அவரது ஆடையாக மாற்றி அணிகிறார். இதற்கிடையில், தன்மீது வரும் விமர்சனங்கள் எதுவும் தன்னை பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை என்ற பாதை எளிதல்ல. பலமுறை மனம் உடைந்திருக்கிறேன். விமர்சனங்களும், கொலை என பல மிரட்டல்களும் எனக்கு நேர்ந்துள்ளன. ஆனாலும் நான் எதற்கும் தயங்காதவள். எதுவும் என்னை கட்டுப்படுத்த முடியாது. இந்த உலகில் நான் முக்கியமானவளாக இருக்கிறேன் என்றுள்ளார்.