நடிகர் சல்மான் கானின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கல்வான்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சல்மான் கான் முகத்தில் இரத்தக்கறைகள் படிந்து கோபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தை அப்போர்வா லக்கியா இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இப்படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் கல்வான் வாலியில் நடந்த ராணுவ வீரர்களின் சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சல்மான் கான் நடித்த முந்தைய படமான ‘சிக்கந்தர்’ எதிர்பார்த்த அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பதால், தற்போது அவரது ரசிகர்களின் கவனமெல்லாம் ‘கல்வான்’ படத்தின் மீது அதிகரித்துள்ளது.