2011ஆம் ஆண்டு வெளியான ‘நேனு நானா அபத்தம்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் ‘அரவிந்த் 2’ மற்றும் ‘ஜிந்தகி’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும், சினிமாவில் நடைபெறும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்ததற்காக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பரவலான பரிச்சயத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைக்கு தன்னை தானாகவே தள்ளிக் கொண்டதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், ‘ரியாலிட்டி ஷோ’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் என்னை சேர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால் நான் ஒரு யூடியூப் சேனல் தொடங்கினேன். அதில், கவர்ச்சியுடன் சமையல் செய்து கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறேன்.
சமையல் நிகழ்ச்சிக்கு கவர்ச்சி என்ன தேவையென்று யோசிக்கலாம். ஆனால் வாய்ப்புகள் இல்லாத எனக்கு வேறு வழியில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டேன். ஆனால் இந்த யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் தற்போது எனக்கு உதவியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.