Touring Talkies
100% Cinema

Saturday, July 5, 2025

Touring Talkies

‘ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படங்களில் ஒன்று தான் ‘ஜூராசிக் பார்க்’. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றிப் பதிவுகளை ஏற்படுத்தி சாதனை படைத்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து மேலும் ஐந்து பாகங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது ஏழாவது பாகமாக ‘ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்’ தமிழிலும் வெளியாகியுள்ளது. இது 3டி வடிவிலும் வெளியானது.

தரையில் நடக்கும் டைனோசர்கள், கடலில் நீந்தும் டைனோசர்கள், வானத்தில் பறக்கும் டைனோசர்கள் என மூன்று வகையான டைனோசர்கள் வாழும் தீவுக்குள் ஒரு குழுவினர் பயணம் செய்கின்றனர். அவர்கள் ஒரு சர்வதேச மருந்து நிறுவனத்திற்கு, இதய நோய்க்கு மருந்து உருவாக்க தேவையான ரத்த மாதிரிகளை இந்த மூன்று வகை டைனோசர்களிடமிருந்து சேகரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் வெற்றிபெற்றார்களா? அல்லது டைனோசர்களால் தாக்கப்பட்டு எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதுதான் படத்தின் கதையின் மையமாக அமைகிறது.

‘அயன்மேன்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’, ‘பிளாக் விடோ’ போன்ற பல ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்த ஸ்கார்லெட் ஜொஹான்சன், இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இது ஒரு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்ஷன் படமாக இருக்கிறது. அவரது தலைமையிலேயே ஈக்குவேட்டாரை ஒட்டியுள்ள அந்த தீவுக்கு ஒரு மருத்துவர், கொடூரமான மருந்து நிறுவன அதிகாரி, பாதுகாப்பு குழுவினர் ஆகியோர் சேர்ந்து பயணிக்கின்றனர். இவர்களுடன், டைனோசர் தாக்குதலால் படகை இழந்து தீவில் தவித்துக் கொண்டிருந்த நால்வர் கொண்ட ஒரு குடும்பமும் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டைனோசர்களிடமிருந்து எவ்வாறு மீண்டனர் என்பதே படத்தின் முக்கியச் சுருக்கமாக அமைகிறது.

இயக்குனர் கரேத் எட்வர்ட்ஸ் இப்படம் முழுவதும் பார்வையாளர்களுக்கு பார்வை விருந்தாக அமைக்கச் செய்கிறார். கடலில் வாழும் திமிங்கல டைனோசர்கள், அவற்றிடம் சிக்கி தப்பிக்க முயற்சிக்கும் குழு, நிலத்தில் வாழும் தாவர உணவுத் டைனோசர்களின் காதல் சார்ந்த காட்சிகள், இறுதியில் வானில் பறந்து தாக்கும் மாமிச உணவுப் பிராணிகள் மற்றும் வெப்பமண்டலக் கலப்பினத் டைனோசர்கள் என பல்வேறு இனங்களை அறிமுகப்படுத்துகிறார். இந்த கலப்பின டைனோசர்களை உருவாக்க அந்த தீவு பாவிக்கப்பட்டதாகவும் கதைக்குள் சொல்லப்படுகிறது.

டைனோசர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கும் முயற்சி மற்றும் அவற்றிடமிருந்து தப்பும் செயல் சார்ந்த காட்சிகள் படத்திற்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றன. குறிப்பாக, சிக்கலான அசைவ டைனோசர் தாக்குதல் காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கின்றன. சைவ டைனோசர்களின் காட்சிகளும், ஒரு குட்டி டைனோசரின் அப்பாவித்தனமும் ரசிக்கத் தக்கவை. ஹீரோயினின் துணிச்சலான முயற்சிகள், நண்பர்களின் தியாகங்கள், டைனோசர்ஸ் தாக்குதல் ஏற்படுத்தும் பதற்றமான நாட்கள் மற்றும் சிறுவனை மையமாகக் கொண்ட சாகசக் காட்சிகள் சிறப்பாக அமைகின்றன. அந்த குடும்பத்தை மையமாகக் கொண்டுள்ள சில காட்சிகளில் உணர்வுப் பிணைப்பு மிகுந்திருக்கும். நதி, மலை, கடல் மற்றும் காட்டுக்குள் நடைபெறும் சண்டை காட்சிகளும், டைனோசர்களுக்கு எதிராக போராடும் குழுவின் உணர்வுகளும் படத்தை முழுவதும் சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.

ஜான் மெத்தல்சனின் ஒளிப்பதிவு மற்றும் ஜான் வில்லியம்ஸின் இசை படத்தின் ரிதமையும் வேகத்தையும் கூட்டுகின்றன. கிளைமாக்ஸில் ஒரு விரிவடைந்த ஆய்வுக்கூடத்தில் சிக்கி தவிக்கும் குழுவினரின் மன அழுத்தம் மற்றும் அவர்களை துரத்தும் டைனோசர்களின் வெறியாட்டம் ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கின்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய இந்த படம், 3டி காட்சிகளில் பெரிதாக வித்தியாசம் காட்டவில்லை என்றாலும், கதை திருப்பங்கள் குறைவாக இருந்தாலும், அதன் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ், பிரமாண்ட மேடை அமைப்பு மற்றும் கதையின் உணர்ச்சி அடிப்படையிலான வெளிப்பாடுகள் அனைத்தும் ஜுராசிக் டைனோசர்களை விட வலிமையான அம்சங்களாக உள்ளன.

- Advertisement -

Read more

Local News