அமீர்கான் நடித்த ‘டங்கல்’ படத்தை இயக்கிய நிதிஷ் திவாரியின் இயக்கத்தில், ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இசையில், ரண்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, சன்னி தியோல், ரவி துபே போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ராமாயணா.

இத்திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் நேற்று யூட்யூப் தளத்தில் வெளியாகி, ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து, இதுவரை 6 மில்லியனைத் தாண்டும் பார்வைகளைக் குவித்துள்ளது.
இந்தப் படத்தில் சீதா வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். அவர் நேற்று அதன் வீடியோவைக் பகிர்ந்து, “சீதா மாதாவினுடைய ஆசீர்வாதத்துடன், இந்த காவியத்தை மீண்டும் உருவாக்கும் பயணத்தில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. நாம் சாதிக்கப் போகும் இந்த அதிசயத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்று பதிவிட்டுள்ளார்.