தனது புதிய மேலாளர் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார் கவுதம் ராம் கார்த்திக். அவர் கூறியதாவது:

“எனக்கு தொடர்ந்து எழுந்துவந்த சில குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த 2 ஆண்டுகளில் பலரும் என்னை அணுக முயற்சி செய்தும், தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகக் கூறியதை நான் கேள்விப்பட்டுள்ளேன்.
இந்த சூழலில் நான் ஒரு முக்கிய விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2023 ஏப்ரல் மாதத்திலிருந்து திரு கோபிநாத் திரவியம் எனது மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த காலத்தில் யாரேனும் என்னைத் தொடர்புகொள்வதில் சிரமப்பட்டிருந்தால், அதற்கு நான் மனமுவந்த மன்னிப்பை கோருகிறேன்.எதிர்காலத்தில் உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”