தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அம்பிகா, சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதில் தவறில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா அனைவருமே சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். நான் பிரபலமாக உள்ளேன் என்பதால் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரவேண்டும். திரை வாழ்க்கை வேறு மக்களுக்கான அரசியல் வேறு என கூறியுள்ளார்.
