பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், நாகார்ஜுனா மற்றும் தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றாக இதுவும் கருதப்பட்டது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

குறிப்பாக ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தமிழில் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும், இந்த திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்தநிலையில், நடிகர் நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு நேர்காணல் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர், கொரோனா காலத்துக்குப் பிறகு, மக்கள் பல்வேறு மொழிப் படங்களையும் ஆர்வமுடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது மிகவும் போற்றத்தக்க மாற்றம். ஆனால், எல்லா படங்களும் பான் இந்தியா படங்களாக மாற முடியாது. ஒரு படத்தை பான் இந்தியா படமாக மாற்ற, மிகுந்த திட்டமிடல், சிறப்பான கதைக்களம் மற்றும் பலவீனமற்ற திரைக்கதையே அவசியமாக்குகிறது. சில கதை வடிவங்களே இந்தியா முழுவதும் வெளியீடுக்கு ஏற்றதாக இருக்கக்கூடும்’’ என்று தெரிவித்துள்ளார்.