தெலுங்கு திரையுலகில் தற்போது கவர்ச்சியுடன் கூடிய குத்தாட்ட பாடல்களே அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், அந்த வகை பாடல்களில் நடனமாடும் நடிகைகள் மிக விரைவில் புகழ்பெறுகின்றனர். அந்தக் கோணத்தில், ‘ராபின்ஹூட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அதி தான் சர்ப்பிரைஸ்…’ என்ற பாடலுக்கு மல்லிகைப்பூ ஆடை அணிந்து கெட்டிகா ஷர்மா ஆடிய நடனம் பெரும் கவனத்தை பெற்றது. அந்த பாடலை பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தனர்.

கெட்டிகா ஷர்மா பொதுவாக எங்கு சென்றாலும் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வெளிப்பட்டு அனைவரின் பார்வையையும் ஈர்ப்பது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வெளிநாட்டில் சுற்றிப்பார்க்கும் போதே, ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்ற கெட்டிகா ஷர்மா, அங்கு சட்டையின் பட்டன்களை கழற்றி கவர்ச்சியான தோற்றத்தில் தோன்றி, அங்கு இருந்தவர்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், “ஓட்டலுக்கே சென்றாலும் இவ்வளவு ஓவர் கிளமாரா வேற ஒரு எல்லை இல்லையா? எனக் விமர்சித்து வருகிறார்கள்.