நடிகர் சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் அதே காலகட்டத்தில் நடக்கும் (World of VadaChennai) கதையாக இருக்கும் என்று சமீபத்திய ஒரு காணொளியில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சிம்புவை பல்வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வைக்க இயக்குநர் வெற்றிமாறன் முனைப்புடன் உள்ளார் எனவும், இப்படத்தின் ஒரு தோற்றத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, இன்னொரு புதிய தோற்றத்திற்கான முன்னோட்ட வீடியோவின் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சமீபத்திய அப்டேட் ரசிகர்களிடையே ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.