‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த AK64 படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் தற்போது அஜித் நடிக்கும் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை பெற்றதன் மூலம் சிறந்த லாபத்தை ஈட்டியவர் ராகுல். இதற்குமுன் ‘நேர் கொண்ட பார்வை’, ‘துணிவு’, ‘வலிமை’ போன்ற அஜித் படங்களின் வியாபாரம் மற்றும் தயாரிப்பிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தமிழகத்தின் முன்னணி விநியோகஸ்தரான இவர், அஜித் ரசிகராகவும் அறியப்படுகிறார். மேலும், ராகுல் நடிகர் விஜய்க்கும் நெருக்கமான நண்பராக இருப்பதுடன், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திலும் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.