தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடித்த ‘தக் லைப்’ திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். வடசென்னை பகுதியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகும் என கூறப்படுகிறது. இந்த தகவல், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை எண்ணூரில் துவங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்த மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, STR-49 என அழைக்கப்படும் இந்தப் புதிய படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ அடுத்த வாரம் வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.