தமிழில் சித்தார்த், அமலாபால் பால் நடித்த ‛காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன்.

தொடர்ந்து துல்கர் சல்மானின் ‛வாயை மூடி பேசவும்’, தனுஷின் ‛மாரி மற்றும் மாரி 2′ ஆகிய படங்களை இயக்கினார். 2018ல் மாரி 2 படத்திற்கு பின்னர் வேறு படங்கள் இயக்கவில்லை. சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி உள்ளார் பாலாஜி மோகன். இந்த முறை அவர் படம் இயக்கவில்லை, மாறாக வெப்சீரிஸ் இயக்குகிறார். இதில் நாயகனாக அர்ஜூன் தாஸ் நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.