இயக்குனரான சமுத்திரகனி கதைநாயகன், வில்லன், குணச்சித்ர வேடங்களில் என பல படங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக ‘ராகு கேது’ என்ற புராணப்படத்தில் சிவனாக நடிக்கிறார். துர்க்கையாக கஸ்தூரி நடிக்கிறார். விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடிக்கிறார். மோகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பரணிதரன் இசையமைக்கிறார்.

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை துரை.பாலசுந்தரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ”ஏ.பி.நாகராஜனுக்கு பிறகு தமிழில் யாரும் பக்தி-புராண படங்களை எடுப்பதே கிடையாது. அந்தவகையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு நேரடி புராண படமாக ‘ராகு கேது’ படத்தை இயக்கியுள்ளோம்.
படத்துக்கு ‘யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளோம். ராகு, கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான தமிழில் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவோம் என்றார்.