ஹிந்தியில் ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தேரே இஸ்க் மெயின்’ . இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது.

சமீபத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விமானப் படை அதிகாரியாக தனுஷ் நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த போட்டோவில் தனுஷ், கீர்த்தி சனோன் இருவர்களின் கைகளும் ரத்தத்துடன் உள்ளது. காதல் தொடர்பான கதையில் இப்படம் உருவாக வருவதாக கூறப்படுகிறது.