நடிகர் தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ மற்றும் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ ஆகிய மூன்று முக்கிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் இப்படத்தின் பின்னணி இசை பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் முதல் பகுதி இசை பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில், ‘இட்லி கடை’ படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் பிற தயாரிப்பு பின்னணி பணிகளை அடுத்த 15 நாட்களில் தீவிரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.