‘சுழல் – தி வொர்டெக்ஸ்’ என்ற இணைய தொடரில் நடித்த எப்.ஜே. தற்போது நடித்திருக்கும் திரைப்படம் ‘தி பிளாக் பைபிள்’ எனப்படுகிறது. இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை எழுதி இயக்கியவர் அறிமுக இயக்குநரான மணிகண்டன் ராமலிங்கம் ஆவார். எப்பிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்பதத்தில், ஒளிப்பதிவாளராக பாலாஜி ராமசாமி பணியாற்றி, இசையமைப்பாளராக அஸ்வின் கிருஷ்ணா பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையில் உள்ள ஒரு கற்பனை கிராமமான அஸ்தினாபுரத்தை மையமாகக் கொண்டு கதை அமைந்துள்ளது என்கிறார். காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட மாந்திரீகம் மற்றும் சூனியத்தின் தாக்கத்தால் சபிக்கப்பட்டுள்ள நிலத்தை விட்டு தப்பி வெளியேற முயலும் இரண்டு பெண்கள், அலிஷா மற்றும் அவளுடைய தாய் ஆகியோரையே சுற்றி இந்தக் கதை நகர்கிறது.
இந்த இருவரும் அந்த சபத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆழமான மற்றும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன்தான் ஒரே ஆதரவாக இருப்பதால், இந்த மூவரும் அமைதிக்கு பின்னால் நிலவும் பயங்களையும், தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் எவ்வாறு இந்த நிலைமையை சமாளிக்கிறார்கள் என்பதே படத்தின் மையக் கதையாகும் என இயக்குநர் விளக்கியுள்ளார்.