ஆந்திர மாநில துணை முதல்வராகவும், நடிகராகவும் உள்ள பவன் கல்யாண், கமல்ஹாசனை தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியத் திரைப்படத் துறையின் பெருமையை உயர்த்தும் மிக முக்கியமான தருணம் இது. பத்மபூஷன் விருது பெற்ற கமல்ஹாசன், 2025ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க அகாடமி விருதுகள் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பு.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது நடிப்புத் திறமையால் திரையுலகில் வெளிச்சம் பரப்பி வருகிறார் கமல்ஹாசன். அவர் வெறும் நடிகரே அல்ல, ஒரு கதை சொல்லுபவராகவும், இயக்குநராகவும் திகழும் அவரது புத்திசாலித்தன்மை, பல்துறை திறமை மற்றும் நெடுங்கால அனுபவம் இந்திய மற்றும் உலக சினிமாவில் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிப்பு, பாடல், எழுத்து, இயக்கம், தயாரிப்பு என திரைப்பணியின் அனைத்துத் துறைகளிலும் அவரது தனித்துவமான ஆளுமை உண்மையாகவே பேராதரவை ஏற்படுத்துகிறது. அவர் ஒரு கலைத்துறையின் மாஸ்டர் எனலாம்.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து, மேலும், உலக சினிமாவில் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.