நடன இயக்குனர் புலியூர் சரோஜா கணவரும், நடிகருமான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.சென்னை, அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சீனிவாசன், 95. இவர், பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர். பாரதிராஜாவின் ‘புதியவார்ப்புகள், கிழேக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சினிமாவில் வசனகர்த்தா, இயக்குனர் என பல வகையில் பணியாற்றியுள்ளார். அரசின் ‘கலைமாமணி’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
