தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஒருவர் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்திற்குப் பிறகு ‘3 BHK’ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இது சித்தார்தின் 40வது திரைப்படமாகும். ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தனக்கு சொந்தமாக ஒரு
3 BHK வீடு வாங்க விரும்பும் ஆசையை மையமாக கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.