தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜயின் பிறந்த நாளை (கடந்த ஜூன் 22ம் தேதி) முன்னிட்டு, நடிகை திரிஷா தனது செல்ல நாய்க்குட்டியுடன் விஜய் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார். புகைப்படத்தில், விஜய் அந்த நாய்க்குட்டியை தூக்கி கொஞ்சும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தப் பதிவில், “சிறப்பானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த படம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை தூண்டியது. சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்தனர்.
தற்போது, விமர்சனங்களுக்கு நடிகை திரிஷா பதிலடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “அன்பு மிகுந்த இடங்களில் தவறான எண்ணங்களுடன் வாழும் சிலருக்கு குழப்பம் ஏற்படுவது இயல்புதான்” என்று கூறியுள்ளார்.