நடிகர் வெற்றி நடிப்பில் சின்னதம்பி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனீஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘முதல்பக்கம்’.

‘சென்னை ஃபைல்ஸ்: முதல்பக்கம்’ என்ற தலைப்புடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். படக்குழுவிற்கு என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.