Touring Talkies
100% Cinema

Thursday, June 26, 2025

Touring Talkies

‘கூலி’ படத்தின் ‘சிக்கிட்டு’ பாடல் வெளியீடு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் ஷாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ தோற்றத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு சிறப்பு பாடலில் நடனமாடியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கக் கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்த சூழலில், இப்படத்தின் முதல் பாடலாக “சிக்கிட்டு” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை அறிவு, அனிருத் மற்றும் டி. ராஜேந்தர் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News