ஹிந்தியில் ‘ராஞ்சானா’, ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களுக்கு பிறகு, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பல கட்டங்களாக டெல்லி மற்றும் பனாரஸ் போன்ற நகரங்களில் நடைபெற்று வந்துள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.

இந்த படம் முழுமையாக காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா இணைந்து நடித்து வருகிறார் என பாலிவுட் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.