Touring Talkies
100% Cinema

Wednesday, June 25, 2025

Touring Talkies

மறைந்த பழம்பெரும் நடிகை மீனா குமாரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறாரா நடிகை கியாரா அத்வானி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகை மீனா குமாரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில் நடிக்க நடிகை கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது கர்ப்பமாக இருக்கும் கியாரா, இந்த படத்தில் ஒப்புதல் அளித்தால், குழந்தை பிறந்த பின் அவருடைய முதல் படம் இது ஆகும். மீனா குமாரியின் வாழ்க்கை குறித்த இந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகிறது.

மீனா குமாரி, பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘பாக்கிஜா’, ‘பைஜூ பாவ்ரா’, ‘பூல் ஆவுர் பத்தர்’ போன்ற படங்கள் இன்றும் பாராட்டப்படுகின்றன. அவர் 39வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கியாரா அத்வானி தற்போது ‘டாக்ஸிக்’ மற்றும் ‘வார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘டாக்ஸிக்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி, ‘வார் 2’ படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News