தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால், தனது பிறந்த நாளை மாலத் தீவுகளுக்கு சென்று தனது குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார்.

தன் கணவர், மகன் மற்றும் தங்கை உடனான சில புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதோடு, நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட சில படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வாரம் திரைக்கு வரவுள்ள “கண்ணப்பா” திரைப்படத்தில், காஜல் அகர்வால் பார்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.