பிரபல ஹிந்தி திரைப்பட நடிகை சோனம் கபூர், தனது தலைமுடியில் இருந்து 12 அங்குலம் நீளமான முடியை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார், அதில் அவர் தனது தலைமுடியை குறைத்து கொண்ட காட்சியும் இடம்பெற்றுள்ளது.

2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை சோனம் கபூர் திருமணம் செய்துகொண்டார். 2022-ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு வாயு என்ற ஆண் குழந்தை பிறந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு சோனம் கபூர் எந்த புதிய திரைப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில், மீண்டும் திரைத்துறைக்கு திரும்பும் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் கர்ப்பத்திற்குப் பிறகு மீண்டும் கேமரா முன்னால் நடிப்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என் அடுத்த படத்துக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.