கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியிருந்தார். இதில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். நஸ்லேன் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் கதையின் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடிகர் சங்கீத் பிரதாப் நடித்திருந்தார். அவர் கதையின் நாயகனுக்கு நண்பராகவும், நாயகிக்கும் நெருக்கமான தோழராகவும் சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது, மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் ஒரு புதிய படத்தில் முதன்முறையாக ஜோடியாக நடிக்கவுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மமிதா பைஜுவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தை டினோய் பவுலோஸ் இயக்கவுள்ளார்.
“காதல் என்பது ஒருபோதும் நம்முடைய மெனுவில் இல்லையென்று நினைத்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்பாராத நேரத்தில் ஆர்டர் செய்வதற்கானது” என்கிற டேக்லைன் கொண்டுள்ள இந்த படம், ‘பிரேமலு’ போன்றே, மகிழ்ச்சி அளிக்கும் காதல் கதையைக் கொண்ட படம் என்றே எண்ணப்படுகிறது