சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானதும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது ‘பீரிடம்’ என்ற புதிய படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குநர் சத்யசிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். இசை அமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார். தவறு ஏதும் செய்யாத நிலையில் இலங்கை அகதிகளாக சிக்கியவர்கள் தப்பி செல்லும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக முடிந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.