Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

விஜய் தொடர்ந்து நடிப்பாரா? நடிகை மமிதா பைஜூ பகிர்ந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியேோல், நரேன், மமிதா பைஜு மற்றும் பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் எனக் கூறப்படுகிறது. இந்த திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாகவே உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலகளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை மமிதா பைஜுவிடம், “விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மமிதா பைஜு, “நான் விஜய் சார் அருகில் இதே கேள்வியை கேட்டேன். அதற்கு அவர், ‘2026 தேர்தல் முடிவைப் பொறுத்துத்தான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வேன்’ என பதிலளித்தார்” என்று தெரிவித்தார். இந்த வார்த்தைகள் அடங்கிய மமிதா பைஜுவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

Read more

Local News