Touring Talkies
100% Cinema

Tuesday, June 24, 2025

Touring Talkies

‘குபேரா’ படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவை இயக்குகிறாரா சேகர் கம்முலா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘குபேரா’ திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அதன் இயக்குனர் சேகர் கம்முலா, எதிர்காலத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை நாயகனாக வைத்து ஒரு காதல் திரைப்படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், ஒரு காதல் படம் எடுக்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படி எடுப்பீர்கள் என்றால் யாரை கதாநாயகனாக தேர்வு செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஒரு சிறிதும் தயங்காமல், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பெயரைக் கூறினார் சேகர் கம்முலா.

அவரது இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ‘லைஃப் இஸ் பியூட்டிபுல்’ படத்தில், விஜய் தேவரகொண்டா ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு உருவாகும் சூழ்நிலையில், ரசிகர்கள் இந்த கூட்டணியை மீண்டும் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News