விமல் சமீபத்தில் நடித்த ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் இயக்குநர்களான நெல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே.தோப்பில் இணைந்து இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதனை மலையாளத்தை சார்ந்த தயாரிப்பு நிறுவனமான அஜித் விநாயகர் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முல்லை அரசி நடிக்கிறார். அவர்களுடன் சேத்தன், பருத்தி வீரன் சரவணன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றுகிறார்.
நகைச்சுவை கலந்து உருவாக்கப்படும் இந்த திரைப்படம், விமலின் 36வது படமாகும். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் தலைப்பை மிக விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.