Touring Talkies
100% Cinema

Saturday, June 21, 2025

Touring Talkies

இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தனது பெயரை ‘RJB’ என குறிப்பிட இதுதான் காரணமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற வைரல் பாடல்களை உருவாக்கிய சாய் அபியங்கர் இசையமைப்பாளராக உள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்திற்கு தற்போது ‘கருப்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு, கருப்பசாமி தேவேந்திர பாண்டரின் அரிவாள் மற்றும் வேலை பிணையமாகக் கொண்டு சூர்யா அரிவாள் ஏந்தியபடி நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளையொட்டி வெளியானது.

முன்னதாக தனது பெயரை “ஆர்.ஜே. பாலாஜி” என பயன்படுத்தியிருந்தார். ஆனால், இந்த போஸ்டரில் அவர் பெயர் ‘RJB’ என சுருக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “ஊர்வசி மேம் எனக்குக் கால் பண்ணி, ‘RJB’னு போடுங்க. பெரியவங்க எல்லாம் மூன்று எழுத்து பெயர் வைக்கிறாங்க. அதே மாதிரி நீயும் வச்சுக்கோ’னு சொன்னாங்க.அது நியூமராலஜிக்கு ஏற்றது போல எனக்கும் தோணிச்சு. ஆனா எனக்கு சிறிய தயக்கமும் கூச்சமும் இருந்துச்சு. அடுத்த படத்தில இருந்து மாற்றலாம் என்று நினைத்தேன்,” என அவர் கூறியிருந்தார். அவர் சொன்னதற்கேற்ப, இப்போது சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் ‘RJB’ என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News