பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் “ஹரி ஹர வீரமல்லு” திரைப்படம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால், ரசிகர்களிடம் ஏமாற்றம் நிலவியது.இந்த நிலையில், இப்படம் தொடர்பாக நீண்டநாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இப்படம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
மீண்டும் மீண்டும் வெளியீடு தாமதமானதால், விரக்தியில் உள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்க விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சத்யராஜ், சுனில், தலிப் தஹில், சச்சின் கெடேகர், சுப்பராஜு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.