சென்னையில் நடைபெற்ற ‘டி.என்.ஏ’ படத்தின் பிரிமியர் ஷோவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார்.இப்படத்தினை குறித்து மிகவும் உணர்ச்சி பொங்க பேசினார்.

‘டி.என்.ஏ’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் முன்னதாக இயக்கிய திரைப்படமான ‘பர்ஹானா’வில், ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.மேலும், அவர் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் ஒரு மலையாள ரீமேக் ஆகும்.
அதன் அசல் பதிப்பில் ஹீரோயினாக நடித்த நிமிஷா சஜயன் தான் ‘டி.என்.ஏ’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த இரு தொடர்புகளின் அடிப்படையில் இந்த நிகழ்வில் பங்கேற்று படத்தை பார்த்துவிட்டு மனதாரப் பாராட்டினார்.