லோகேஷ் கனகராஜ் இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில்,இந்தப் படத்தில் என்னை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் விரும்பியதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி, ‘வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் உங்களுக்கு ஏதாவது தயக்கம் இருக்கிறதா? என்பதுதான். நீங்கள் ஒத்துக்கொண்டால் தொடர்ந்து பேசலாம் என்று அவர் சொன்னார்.
ஆனால், நான் முதலில் கதையை கேட்க விருப்பம் தெரிவித்தேன். அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்போது யாராவது ‘கூலி’யில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என கேட்டால், அதற்கு நான் ஒரே வார்த்தையில் பதில் கூறுவேன் என கூறியுள்ளார்.