தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர், ‘விடுதலை 2’ படத்தை தொடர்ந்து, தற்போது பாண்டிராஜ் இயக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ‘பிசினஸ்மேன்’, ‘டெம்பர்’, ‘லிகர்’, ‘டபுள் இஸ்மார்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த பான் இந்தியா திரைப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. கதையின் தனித்துவம் மற்றும் கதாபாத்திரம் இவரை ஈர்த்ததால், தபு உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் நடித்திருக்கும் பாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும் என கூறப்படுகிறது. இதனிடையே, ‘வாத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சம்யுக்தா இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.