Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

நியூ லுக்கில் சிம்பு… வெளியான வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் தோற்றத்துடன் காணப்படுகிறார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் நெல்சன் இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது ‌

இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும், நெல்சன் மற்றும் கவின் ஆகியோர் கேமியோ வேடங்களில் நடிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News