ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா தனது 45வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தலைப்பை குறித்த டைட்டில் டீசர் வீடியோ வரும் ஜூன் 20ஆம் தேதி, ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்குமுன்னர் இப்படத்திற்கு ‘வேட்டை கருப்பு’ என்ற தலைப்பே வைத்துள்ளதாக என செய்திகள் வந்தன.
தற்போது இப்படத்திற்கு ‘கருப்பு’ என்ற தலைப்பே உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.